2026- ஆண்கள் டி-20, உலகக் கோப்பைக்காக, இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்
ஜனவரி 26 ,அன்று குடியரசு தினம் இந்திய விமானப்படை பறக்கும் போது புதிய "சிந்தூர்" வடிவமைப்பை பிரதிபலிக்குமாறு காட்சிப்படுத்ப்படவுள்ளது.. இதில் ரஃபேல், எஸ்.யூ-30,எம்.கே.ஐ , எம்.ஐ.ஜி-29 மற்றும் ஜாகுவார் ஜெட் விமானங்கள் இடம்பெறும்.
பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனம் சாலையில் இருந்து தவறி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது..10 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன
ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 15 மாவோயிஸ்ட்களைக் கொன்றனர், இதில் ஒருவரின் தலைக்கு ₹1 கோடி பரிசுத் தொகைஅறிவிக்கப்பட்டிருந்தது..
அதிபர் டொனால்ட்டிரம்பின் அமைதி வாரியம் டாவோஸில் காசா அமைதி முயற்சியின் தொடக்க விழாவில் இந்தியா கலந்து கொள்ளவில்லை . அதே நேரத்தில் பாகிஸ்தான் கலந்து கொண்டது.
பிரதமர் மோடி பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் அவர்களின் கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்த பேசினார்; பிரேசில் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள்சூசகமாக அதை வெளிப்படுத்தினா்.
ஏர் இந்தியா இழப்பு: விமான விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வான்வெளி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் சுமார் ₹15,000 கோடி ($1.6 பில்லியன்) இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்.
விமான நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 78% சரிவை ஏற்படுத்திய மூத்த துணைத் தலைவரை பணிநீக்கம் செய்யுமாறு அரசாங்கம் இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 91.70 ஆகக் குறைந்து புதிய வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டதால் என்.சி.ஆரில் கிராப்-3 கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன.
2026- ஆண்கள் டி-20, உலகக் கோப்பைக்காக, இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஐ சி சிக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது .
கான்பூர் ஐ.ஐ.டி -ல் சமீபத்தில் நடந்த சம்பவம் உட்பட, ஐஐடிகளில் தொடர் தற்கொலைகளைத் தொடர்ந்து மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மறுபரிசீலனை செய்ய கல்வி அமைச்சகம் ஒர் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது .
டிஜிட்டல் கைது, மோசடியில் மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ₹4 கோடியைஇழந்துள்ளாா்.
Tags :

















