மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரானா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

by Editor / 10-04-2023 01:53:43pm
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரானா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் இன்று முதல் 2  நாட்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  
தொடர்ந்து கொரானா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடும் முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.  மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரானா வெளி நோயாளிகள் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு கொரானா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் கொரானா கவச உடையோடு ஒத்திகை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo