போக்குவரத்து நெரிசலால் ரூ.19 கோடி இழப்பு

by Staff / 07-08-2023 04:21:28pm
போக்குவரத்து நெரிசலால் ரூ.19 கோடி இழப்பு

பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். இந்த கடும் போக்குவரத்து நெரிசலால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நகரில் போக்குவரத்து பிரச்னையால் ரூ. 19,725 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. சாலை திட்டமிடல், போக்குவரத்து மேலாண்மை, மேம்பாலம் மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போதைய சாலை 985 சதுர கிலோமீட்டரில் இருந்து 1,100 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via