விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்வு

நடிகர் விஜயின் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உறுப்பினர்கள் தவெகவில் சேர்ந்து வருகின்றனர். உறுப்பினர்கள் சேர்க்கைக்கென ஏற்கனவே மாநில அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். விரைவில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் அறிவிக்க இருக்கிறார்.
Tags :