குடியரசுத் தலைவர் பேசிக் கொண்டிருந்தபோது மின் தடை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலம் பரிபாடாவில் உள்ள பரிபாடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தேவ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அவர் மாணவர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனையடுத்து, சுமார் 9 நிமிடம் இருளில் ஜனாதிபதி பேசினார். இந்த சம்பவத்திற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னிப்பு கேட்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழகம் நியமித்துள்ளது.
Tags :



















