மல்லிகார்ஜுனா கொலை மிரட்டல் ஆடியோ குறித்து விசாரிக்கப்படும்

by Staff / 07-05-2023 02:33:54pm
மல்லிகார்ஜுனா கொலை மிரட்டல் ஆடியோ குறித்து விசாரிக்கப்படும்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்ய திட்டமிடுவது தொடர்பான ஆடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனிடையே காங்கிரஸ் பொதுச்செயலாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பாஜக தோல்வி பயத்தால் மல்லிகார்ஜுனா கார்கேவை கொலை செய்ய திட்டமிடுவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, 'மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படும் ஆடியோ குறித்து எனக்கு தெரியாது. ஆனால் ஆடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

Tags :

Share via

More stories