சென்னை சங்கமம் நம்ம- ஊரு திருவிழா- 2026 நிகழ்வை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், தமிழகத்தின் கலாச்சார பெருமைகளை பறைசாற்றும் சென்னை சங்கமம் நம்ம- ஊரு திருவிழா- 2026 நிகழ்வை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கரகாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து ,தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் காவடி ஆட்டம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமிய கலை வடிவங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன,, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,500 முதல் 2,000 கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் ,ஜனவரி 14 முதல் 18 வரை சென்னையின் பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் கடற்கரைகள் என மொத்தம் 20 இடங்களில் இந்த கலை விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வு நடைபெறும் இடங்களில் பாரம்பரிய கிராமிய உணவுகளை பொதுமக்கள் உண்டு களிக்க 100க்கும் மேற்பட்ட உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்த பெறும் இவ்விழா ஒருங்கிணைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளார்,
Tags :


















