புதுச்சேரி- சிறுமியை  பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி கொலை செய்த இருவர் கைது

by Admin / 06-03-2024 09:59:18am
 புதுச்சேரி- சிறுமியை  பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி கொலை செய்த இருவர் கைது

 புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஒன்பது வயது சிறுமி 4 நாட்களாக மாயமானதை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காவல்துறையினர் தீவிரமாக  தேடி  வந்த நிலையில் சிறுமியின் உடல் அருகில் உள்ள வாய்க்காலில் கை கால் கட்டப்பட்டு கோணி பையில் இடப்பட்டு வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்..  இந்நிலையில், 54 வயதான விவேகானந்தன் 19 வயதான கர்ணாஸ் என்கிற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. சிறுமியை  பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய போது  அவர்  கத்தி  கூச்சலிட்டதால்  கொன்று கை கால்களை கட்டி  வாய்க்காலில் வீசியதாக இருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள் .சடலமாக மீட்கப்பட்ட  சிறுமியின்  உடல் இன்று ஜிப்மர்  மருத்துவமனையில் கூராய்வு செய்யப்பட உள்ளது.

 

 

Tags :

Share via

More stories