கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் கண்ணீர்வடிக்கும் கூலித்தொழிலாளர்கள். 

by Editor / 06-03-2024 09:51:36am
கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் கண்ணீர்வடிக்கும் கூலித்தொழிலாளர்கள். 

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரளா மாநிலத்திற்கு 24 மணி நேரமும் பால் அரிசி காய்கறி பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு தென்காசி திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 10 சக்கரங்கள் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பிற வாகனங்கள் அனைத்தும் தென்காசி மாவட்டம் புளியரை வழியாக செல்வதால் அடிக்கடி மழைவழிச் சாலையில் சில வாகனங்கள் பழுதாகி நிற்பதால் திடீர் வாகன நெரிசல் இரவு நேரங்களில் ஏற்பட்டு அதிகாலை வரை நீடிக்கின்றது இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் எஸ் வளைவு பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி ஒன்று குறுகிய பாதையில் மலைவழிச் சாலையில் வழுதாகி நின்றதின் காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் காய்கறி வாகனங்கள் அரசு பேருந்துகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட சேவை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டியது இதன் காரணமாக போதிய அளவு சோதனை சாவடி காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டாலும் குறைந்த அளவை பணியாளர்கள் இருந்ததின் காரணமாக முழுமையாக போக்குவரத்தை அவர்களால் சீர் செய்ய முடியாமல் மிகவும் திணறினர் இந்த நிலையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அதிகாலை முதல் போக்குவரத்தை சீர் செய்யும் பணி நடைபெற்றன இதன் தொடர்ச்சியாக காலை 6:30 மணி முதல் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் உத்தரவின் பேரில் காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் கண்ணா மற்றும் உதவி ஆய்வாளர் தீபன் குமார் உள்ளிட்டோர் மற்றும் 10 க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.அடிக்கடி ஏற்படும் வாகனநெரிசலால் கேரளாவுக்கு கூலித்தொழிலாளியாக செல்லும் நூற்றுக்கணக்கானோர் அதிகாலை பானைக்கு செல்லமுடியாமல் வீடு திரும்பும் நிலையுள்ளதால்  வருமானம் போச்சே என கண்ணீர்வடித்துவருகின்றனர்.
 

 

Tags : கனிமவளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் கண்ணீர்வடிக்கும் கூலித்தொழிலாளர்கள். 

Share via