அஸ்ஸாமில் ரயில்வே தண்டவாளங்களில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர்
அஸ்ஸாமில் ஜமுனாமுக் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெள்ளம் ஏற்பட்டது. ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சங்ஜுரை மற்றும் பாடியா பதர் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், குடியருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரயில்வே தண்டவாளங்களில் தற்காலிகமாக தார்பாய் ஷீட்டுகள் அமைத்து தங்கியுள்ளனர்.
மாநில அரசிடம் இருந்து கடந்த 5 நாட்களாக எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று கிராமத்தினர் தெரிவித்தனர். 29 மாவட்டங்களில் உள்ள 2,585 கிராமங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண படையினர் ஆகியோர் 86,772 பேரை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து வெளயேற்றி 343 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags : More than 500 families living on railway tracks in Assam