டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை
ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பயானா நகருக்கு அருகே உள்ள அடா கிராமத்தில் பகதூர் குர்ஜார் மற்றும் அதர் சிங் குர்ஜார் குடும்பங்களுக்கு இடையே நிலத்தகராறு உள்ளது. காலையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அதர் சிங் குர்ஜாரின் மகன் நிர்பத் குர்ஜார் (வயது 35) என்பவர் சில குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அவர் மீது டிராக்டரை ஏற்றினர். இதில் நிர்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :