ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது கூடுதலாக 2 வழக்குகள் பதிவு

நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில்,
ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இவர் மீது மொத்தம் 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த வழங்கில், பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மேலும் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :