பிளஸ் டூ மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்

by Staff / 05-03-2025 04:26:54pm
பிளஸ் டூ மாணவனை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்

தமிழக முழுவதும் முதல் பிளஸ் டூ தேர்வு நடக்கும் நிலையில், கடந்த 3ஆம் தேதி அபிஷேக் ஸ்டீபன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது படிப்பதை நிறுத்திவிட்டு, உடன்படிக்கும் நண்பன் பிரின்ஸ் என்ற மாணவருடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட உடற்கல்வி ஆசிரியர் மாணவர் அபிஷேக் ஸ்டீபனை தனது அறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயம் அடைந்த மாணவன் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மாணவனின் தாய் ஈஸ்வரி தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு இதுபோன்று அபிஷேக் ஸ்டீபனை இதே உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via