மது குடித்ததை கண்டித்த தாய். தற்கொலை செய்த மகன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சின்னசேங்கல் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் வேல்முருகன் வயது 20.மார்ச் 2ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற வரை அவரது தாயார் மஞ்சுளா கண்டித்து திட்டியுள்ளார்.இதனால் விரக்த்தி அடைந்த வேல்முருகன், அவரது வீட்டில் காலை 10 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தன்மகன் தூக்கிட்டு கொண்டதை பார்த்த அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார்.மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த வேல்முருகனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Tags :