கோயில் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

by Editor / 04-08-2025 04:50:04pm
கோயில் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மதுரை அருகே விரகனூர் பகுதியில் உள்ள சி.ஆர்.கல்யாண மஹால் எதிரே உள்ள பிரகதீஸ்வரர் கோயில் அருகே அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக நேற்று  காலையில் கிடைத்த தகவலின் பேரில் விரகனூர் கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via