மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

by Editor / 14-09-2021 02:54:29pm
மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்புக்கு 4.52 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு மின்சார வாரியம் விரைவில் கடிதம் அனுப்பும். கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் பதிவு செய்தவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் முடிந்த பின்னர் மின் இணைப்பு வழங்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 16,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது 40% மின்சாரம் தனியாரிடம் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது. நிலக்கரி மாயம் தொடர்பான விசாரணை குழு இறுதி அறிக்கையின் ஆய்வில் உள்ளது. அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை முதலமைச்சரின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via