ரூ.300 கோடியில் "நமக்கு நாமே திட்டம்" - தமிழக அரசு அரசாணை

by Editor / 14-09-2021 02:55:50pm
ரூ.300 கோடியில்

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 'நமக்கு நாமே திட்டம் ' செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் "நமக்கு நாமே" திட்டம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன்மூலம்,சென்னை மாநகராட்சி, அனைத்து 14 மாநகராட்சிகள், அனைத்து 121 நகராட்சிகள் மற்றும் அனைத்து 528 டவுன் பஞ்சாயத்துகளிலும் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படும்.

அதன்படி,நகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை புணரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதார மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன.

 

Tags :

Share via