,அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு .

by Admin / 20-01-2026 01:26:09pm
 ,அ.தி.மு.க மற்றும்  பா.ஜ.க சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு .

இன்று தமிழக சட்டப்பேரவியின் இந்த ஆண்டின் முதல்கூட்டத் தொடர்  தொடங்கிய நிலையில் ,அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்த  வெளிநடப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், சட்டசபையில் ஆளுநர் ஆர் .என் .ரவி உரையாற்றாமல் வெளிநடப்பு செய்ததை எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்துப்பேசினர். அரசு தயாரித்த உரையில் தவறான மற்றும் உண்மைக்கு மாறான தகவல் இருந்ததால் அவற்றை வாசிக்க விரும்பாமல் ஆளுநர் வெளியேறியதில் தவறில்லை என்றும் முதலீடுகளை ஈர்க்கின்ற இடத்தில் நாலாவது இடத்தில் இருந்த தமிழகம் இப்பொழுது ஆறாவது இடத்திற்கு வந்துவிட்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாகவும் தினந்தோறும் பாலியல் வன்கொடுமை நடக்காத நாள் இல்லை என்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இடம் பெற்றிருப்பதாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை 33 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும்  குற்றம் சாட்டி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தார். தமிழக அரசு தயாரித்த உரையில் பொதுமக்களை வாட்டு முக்கிய பிரச்சனைகள் குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை என்றும் அரசு பெரும் விளம்பரத்திற்காக தரவுகளை திரித்துக் கொள்வதாகவும் அவர்கள் பரிசுத்தர் எதிர்க்கட்சிகள் எழுப்பிய மக்கள் சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்றும் ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆளுநர் இன்று தேசிய கீதம் இசைக்கப்படாதது மற்றும் அரசின் உரையில் இருந்த முரண்பாடுகளை காரணம் காட்டி உரையை வாசிக்காமல் சபையில் இருந்து வெளியேறியது தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் வழி நடப்பு செய்தனர்.

 

 

Tags :

Share via