சோனியா காந்தி, ராகுல் காந்தி வருகை

by Staff / 17-07-2023 04:36:33pm
சோனியா காந்தி, ராகுல் காந்தி வருகை

காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூனன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 24 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெங்களூரு வருகை தந்துள்ளனர். பெங்களூரு விமான நிலையத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 

Tags :

Share via