விஜய் பிரச்சாரக்கூட்டத்தில்பாதிக்கப்பட்ட 4 பேரைத்தவிர அனைவரும் வீடு திரும்பினர்.
விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள், கரூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அனைவரும் வீடு திரும்பினர். 41 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். 51 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மீதமுள்ள 59 பேருக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திருச்சியில் 2 பேர், மதுரையில் 2 பேர் என 4 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags : விஜய் பிரச்சாரக்கூட்டத்தில்பாதிக்கப்பட்ட 4 பேரைத்தவிர அனைவரும் வீடு திரும்பினர்



















