நாளை மறுநாள் திகாரில் சரண்- கெஜ்ரிவால்

by Staff / 31-05-2024 02:19:57pm
 நாளை மறுநாள் திகாரில் சரண்- கெஜ்ரிவால்

இடைக்கால ஜாமின் முடிந்து நாளை மறுநாள் திகார் சிறையில் சரணடைய உள்ளேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவர்கள் சில பரிசோதனைகளை பரிந்துரைத்தும் பாஜக அரசு ஜாமRனை நீட்டிக்க மறுக்கிறது. ஆனாலும், நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து பாதுகாக்க சிறை செல்வதில் பெருமையே. வெளியே வந்த பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தொடங்குவேன்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo