ஒருதலை காதல்.. இளம்பெண் வெட்டிக் கொலை..

by Staff / 31-05-2024 03:19:13pm
ஒருதலை காதல்.. இளம்பெண் வெட்டிக் கொலை..

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூரு - சத்திரம்பாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரத்னா கிரேஸ் (23). இந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் ஏசுரத்தினம் (23). தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், ரத்னா கிரேஸுக்கு வேறு ஒருவருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனால், ஆத்திரத்தில் இருந்த ஏசுரத்தினம் நேற்று (மே 30) வீதியில் வைத்து ரத்னா கிரேஸை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சி இன்று வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories