முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் திடீர் ரத்து

by Staff / 31-05-2024 03:23:06pm
முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் திடீர் ரத்து

முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தியா கூட்டணி நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வரும் 1-ம் தேதி பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு பதிலாக டி.ஆர்.பாலு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via