இலங்கை கடற்படையினரைக்கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

by Editor / 11-09-2022 11:53:50am
இலங்கை கடற்படையினரைக்கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

இலங்கை கடற்படையினரால் கடந்த 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 80 படகுகளையும், 10 நாட்டுப்படகுகளையும் உடனடியாக விடுவிக்கவேண்டும். அதேபோல, இலங்கைச்சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். மன்னார் வளைகுடா, பாக்நீரிணை, மற்றும் வங்காளவிரிகுடா கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். படகு ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் 1800 லிட்டர் டீசல் மானியத்தை 3000 லிட்டராக அதிகரித்து வழங்க வேண்டும்.
கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டுவரை இலங்கையில் பிடிபட்டிருந்த படகுகளில் இலங்கை அரசு விடுவித்தும், மீட்க முடியாமல் சேதமடைந்த 125 விசைப்படகுகளுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் வழங்கிய நிவாரணம் வழங்கியது. ஆனால், இன்னும் 7-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்காமலிருப்பதால் உடனடியாக அந்தப்படகுகளுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 9ம் தேதி முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 

Tags :

Share via