நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Editor / 11-09-2022 11:53:51am
நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்குட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரத்தில் இருந்து 65 கி.மீ தொலைவில் இன்று காலை மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

 

Tags :

Share via