ஜெயக்குமார் தனசிங்கின் செல்போன் மாயம் - போலீஸ் விசாரணை

திருநெல்வேலி காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமாரின் உறவினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உயிரிழந்து கிடந்த இடத்தில் அவரது ஆதார், ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது செல்போன் மாயமானது குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :