மது விற்ற 3 பேர் கைது; 162 பாட்டில்கள் பறிமுதல்

சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகரன், பழனிசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி, அதனை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த சங்ககிரி டி. பி. ரோடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (வயது 32), தேவண்ணகவுண்டனூரை சேர்ந்த சுரேஷ் (32), உலகப்பனூரை சேர்ந்த காளிதாஸ் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 162 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்கள் அதிக போதைக்காக மதுபாட்டில்களில் ஊமத்தங்காய் சாற்றை கலந்து விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :