இன்று திருச்சியில் தி. மு .கவின் பிரம்மாண்ட  மாநில மாநாடு நடைபெறுகிறது. 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பு.

by Admin / 09-03-2026 09:11:15am
இன்று திருச்சியில்  தி. மு .கவின் பிரம்மாண்ட  மாநில மாநாடு நடைபெறுகிறது. 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பு.

இன்று  திருச்சியில் .சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் தி. மு .கவின் பிரம்மாண்ட  மாநில மாநாடு நடைபெறுகிறது.சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது .தமிழகம் முழுவதிலும் இருந்து 10 லட்சம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  இன்று மாலை 5:30 மணியளவில் தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் இந்த மாநாட்டில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 லட்சம் நாற்காலிகள், ராட்சத எல்.இ.டி திரைகள், குடிநீர் மற்றும் உணவு வசதிகள் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடத்திற்காக மட்டும்  200 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கானபணிகளை அமைச்சர் கே.என்.நேரு  கவனித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் மாநாடு நடைபெறுகிறது

இன்று திருச்சியில்  தி. மு .கவின் பிரம்மாண்ட  மாநில மாநாடு நடைபெறுகிறது. 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பு.
 
Tags :

Share via