சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி.

by Editor / 28-08-2024 08:59:03am
சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி.

தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைகுளத்திற்கு விவசாய பணிகளுக்காக லோடு ஆட்டோவில் இன்று காலை ஆட்களை ஏற்றி சென்ற நிலையில் சுரண்டை அருகே சென்று கொண்டிருந்தபோது சுரண்டை வாடியூர் சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாகனத்தை ஓட்டுனர் திருப்ப முயன்ற போது கட்டுப்பாடு இழந்த வாகனம் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள பள்ளத்தில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 14 பேர் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில்  மூன்று பெண்கள் ஜானகி, பிச்சம்மாள் வள்ளியம்மாள், பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர்.காயமடைந்தவர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விவசாய பணிகளுக்காக சென்ற வேலையாட்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் பலி

Share via

More stories