தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

by Editor / 25-04-2022 11:32:35pm
தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

தமிழ்நாடு முழுவதும் 55 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம், சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிபதி கே.ஐயப்பன், சென்னை உயர் நீதிமன்ற தமிழ் சட்ட இதழின் முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்தியாவசியப் பொருள்கள் சட்ட முதன்மை சிறப்பு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெ.ப்ளோரா சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 2வது கூடுதல் நீதிபதியாகவும், காஞ்சிபுர மாவட்ட மற்றும் செஷன்ஸ் 2வது நீதிதி ஜெ.சந்திரன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 5வது கூடுதல் நீதிபதி(தடா)யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 6வது கூடுதல் நீதிபதியாகவும், மதுரை 1வது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.பத்மநாபன் திருநெல்வேலி 2வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.  ஈரோடு மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பார்த்தசாரதி திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற  நீதிபதியாகவும், திருவள்ளூர் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.ரமேஷ் சென்னை நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை உயர் நீதிமன்ற தமிழ் சட்ட இதழின் முதன்மை ஆசிரியர் எஸ்.மோகனகுமாரி, செங்கல்பட்டு நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 2வது கூடுதல் நீதிபதி வி.தங்க மாரியப்பன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 1வது கூடுதல் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 4வது கூடுதல் நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 3வது கூடுதல் நீதிபதியாகவும், சென்னை சிட்டி சிவில் 5வது கூடுதல் நீதிபதி(தடா) டி.ஆனந்த் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 4வது கூடுதல் நீதிபதியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.  சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 20வது கூடுதல் நீதிபதி எஸ்.சுஜாதா சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 19வது கூடுதல் நீதிபதியாகவும், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 18வது கூடுதல் நீதிபதி எஸ்.டி.லட்சுமி ரமேஷ் சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 22வது கூடுதல் நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளனர்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவு.

 

Tags :

Share via