பீகார் முன்னாள் முதல்வர் லாலுக்கு ஜாமீன்
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 4-வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தமுள்ள 4 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிபிடத்தக்கது.
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். பீகார் முதலமைச்சராக இருந்த போது 1990களில் தும்கா கருவூலத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக மொத்தமுள்ள 4 வழக்குகளில் லாலு பிரசாத்திற்கு ஏறக்குறைய 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் லாலு பிரசாத் யாதவ். மொத்தமுள்ள 4 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் 4-வது வழக்கான தும்கா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவ்வுக்கு உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.அவர் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Tags :