வங்கிகளில் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன் விலக்கு

by Editor / 18-03-2025 10:30:45am
வங்கிகளில் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன் விலக்கு

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகள் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன்களை, தங்கள் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இக்கடன்கள் தள்ளுபடியல்ல என்றும், அவற்றைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாராக்கடனில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ₹9.27 லட்சம் கோடி ஆகும்.

 

Tags : வங்கிகளில் ₹16.35 லட்சம் கோடி வாராக்கடன் விலக்கு

Share via