காங். தலைவர் சோனியா காந்தியின் திட்டம் பலிக்குமா...?!

by Admin / 13-08-2021 01:15:17pm
காங். தலைவர் சோனியா காந்தியின் திட்டம் பலிக்குமா...?!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக-வை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் வியூகம் அமைக்கும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். அதன்படி தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த கிஷோரை சந்தித்து பேசினார். இதேபோல் அரசியல் வியூக நிபுணர் பிரஷாந்த கிஷோர் சமீபத்தில் சோனியா, ராகுல் பிரியங்கா ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மம்தாவின் டெல்லி பயணமும் 2024 தேர்தலையொட்டியே அமைந்திருந்தது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மம்தா, மு.க.ஸ்டாலின், உத்தச் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த சோனியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும்20 ஆம் தேதி காணொலி வாயிலாகவும் அடுத்த மாதம் நேரிலும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories