நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர்  மருந்து விற்பனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

by Editor / 14-05-2021 04:39:09pm
 நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர்  மருந்து விற்பனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்



 ரெம்டெசிவிர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் விற்பனை செய்யப்படும் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் தலைமையில், 'அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்' நடைபெற்றது. இக்கூட்டத்தில் 13 கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நேரு ஸ்டேடியத்தில்  ரெம்டெசிவிர் விற்பனை!கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மக்களின் உயிர் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை தீவிரப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தீர்மானம் போட்டு, அனைத்து கட்சிகளும் அதனை ஏற்று கொண்டுள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo