அர்ஜுனா விருதை பெற்றுக்கொண்ட ஷமி
இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளில் உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற்றார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அவரின் சிறப்பான பந்து வீச்சின் மூலமாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியர்களின் மனதில் நீங்க இடம்பிடித்த அவருக்கு சமீபத்தில் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. ஏழு போட்டிகளில், ஷமி 10.70 சராசரியிலும், 12.20 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 24 விக்கெட்டுகளை 7/57 என்ற சிறந்த புள்ளிகளுடன் எடுத்திருந்தார்.
Tags :