குற்றாலத்தில் சிறுவர்கள் உட்பட 8 பேரை துரத்தி, துரத்தி கடித்த வெறிநாய் - அச்சத்தில் சுற்றுலா பயணிகள். .

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதிக்கு சுற்றுலா வந்த 2 சிறுவர்கள் உட்பட 8 நபர்களை வெறிநாய் ஒன்று துரத்தி, துரத்தி கடித்த நிலையில், தற்போது 8 நபர்களும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, நாடு முழுவதும் வெறிநாய்கள் தொந்தரவு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அரசிற்கு அறிவுறுத்தல் செய்து வரும் நிலையில், வெறிநாய் கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சுற்றுலாத்தளமான குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள் சாமி, புளியங்குடி பகுதியை சேர்ந்த மைக்கேல், கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த செல்வம், சிவகங்கை பகுதியை சேர்ந்த சகாதேவன், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த சௌமியா மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட 6 நபர்களையும், இரண்டு சிறுவர்களையும் வெறிநாயானது துரத்தி, துரத்தி கடித்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : குற்றாலத்தில் சிறுவர்கள் உட்பட 8 பேரை துரத்தி, துரத்தி கடித்த வெறிநாய் - அச்சத்தில் சுற்றுலா பயணிகள். .