சூரியன், பூமி, சனி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு

by Editor / 01-08-2021 04:06:00pm
சூரியன், பூமி, சனி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு

சூரியன், பூமி மற்றும் சனி மூன்றும் ஒன்றுக்கு ஒன்று நேர்க்கோட்டில் சந்திப்பது மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்தாண்டு அந்த அபூர்வ நிகழ்வு இன்று நடைபெற உள்ளது,இந்த அபூர்வ நிகழ்வு இன்று மட்டுமின்றி நாளையும் நடைபெற உள்ளது. இன்று தொடங்கும் இந்த அபூர்வ நிகழ்வு இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிகழ உள்ளது. இந்த நிகழ்வின்போது சனி மற்றும் பூமி கோள்களுக்கு இடையே சூரியன் மறையும்போது வியாழன் கிரகம் பிரகாசமாக ஒளிரும். இந்த அபூர்வ நிகழ்வை வெறும் கண்களால் பார்க்க முடியும். ஆனால், சனி கிரகங்களை தொலைநோக்கி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.சூரிய குடும்பத்திலே சனி கிரகம் முற்றிலும் மாறுபட்ட கிரகம், சூரியகுடும்பத்தில் ஆறாவதாக உள்ள இந்த சனி கிரகம், வியாழன் கோளிற்கு பிறகு இரண்டாவது பெரிய கிரகம். சூரியனில் இருந்து தொலைவில் உள்ள நான்கு கிரகங்களில் சனி கிரகம் மிகவும் முக்கியமானது ஆகும்.

சனிக்கிரகமானது ஹைட்ரஜனாலும், ஹீலியத்தாலும் நிரம்பியுள்ளது. இதன் காந்த ஈர்ப்புசக்தி திறன் பூமியை காட்டிலும் 580 மடங்கு அதிகமாக உள்ளது. சனி கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகளுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via