நடிகை ஸ்ரீதேவியை கெளரவித்த கூகுள் ..
இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி இவருக்கு இன்று 60வது பிறந்த நாள் அவரது நாளையொட்டி அவரின் படத்தை சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரமாக (டூள்) வடிவமைத்து கூகுள் கெளரவப்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி இந்த கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்துள்ளார்.இந்த சித்திரத்தில் இந்து மதத்தில் ஆசிர்வாதம் வழங்கும் முத்திரையோடு கரங்களின் கூடிய கலர்புல்லான கனிகள் நிரம்பியதாக அந்தசித்திரம்வரையப்பட்டுள்ளது.மேலும் இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீதேவி, 2000ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வபோது பங்கேற்றுவந்தார்.
அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு இங்கிலீஸ் விங்கிலீஸ் திரைப்படம் மூலம் மீண்டும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார்.நடிகை ஸ்ரீதேவிக்கு 2017ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதினை மத்திய அரசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. அப்போது அவர் நடித்த மாம் திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில், நடிகைகள் முதன்மை பாத்திரத்தை ஏற்று நடிக்கும் படங்களும் வெற்றிபெறும் என்ற வரையறையை இந்திய சினிமாவுக்கு வகுத்துக்கொடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் 2018 பிப்ரவரி 24-ல் இறந்தார். தமிழகத்தில் அதுவும் தென்தமிழகத்தை சார்ந்த ஒருநடிகையின் படத்தை டூலாக வைத்து கூகுள் நிறுவனம் கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :