மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

திருவள்ளூர் செல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் விஜயன் (38). இவரது மனைவி மோகனா (28). இவர்களுக்கு 10 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அசாமில் பணியில் இருந்த விஜயன், சமீபத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று, மதுபோதையில் வீட்டிற்கு வந்த விஜயன், குடும்பதகராறு காரணமாக தனது அண்ணனை வீட்டை விட்டு அனுப்பியது ஏன்? என கேட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரத்தில் கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :