எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் குடும்பத்தாரர் மீது வழக்கு-முதல் தகவல் அறிக்கை
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
எம்.ஆர்.விஜய பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.அதாவது,2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து மதிப்பு இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால்,அடுத்த கட்டமாக வங்கி கணக்குகள் மட்டும் அல்லாமல் வங்கி லாக்கரையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாகவும்,மேலும்,அவரது வங்கி கணக்குகள் முடக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags :



















