பாகனை மிதித்து கொன்ற யானை.
கேரள மாநிலம் மூணாறு அருகே அடிமாலி கல்லாறு யானைகள் சவாரி மையத்தில் சுற்றுலா பயணிகளை யானை மீது ஏற்றிச் செல்லும் பணியில் இருந்த பாகன் யானை மிதித்து உயிரிழந்தார். காசர்கோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை யானை துடிதுடிக்க மிதித்துக் கொன்றது. நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. யானை பலமுறை அவரது உடலை மிதித்து தூக்கி அடித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பாலகிருஷ்ணனின் உடல் அடிமாலி தாலுகா மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பாகனை மிதித்து கொன்ற யானை.



















