குற்றாலம் பேரருவி,ஐந்தருவி,சுருளி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
கடந்த இரண்டு தினங்களாக தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நீர் வரக்கூடிய பாதைகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் குற்றாலம் பேரருவியியிலும் ஐந்தருவியிலும் வெள்ள பெருக்கு உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது மேலும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மழையின் தாக்கம் அதிகரித்தால் பழைய குற்றாலம் அருவியில் தடை விதிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















