முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் காலமானார்

by Editor / 17-03-2025 04:26:54pm
முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதான் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பிரதான் (84) காலமானார். வாஜ்பாய் அரசில் போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்த தேவேந்திர பிரதான் நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தர்மேந்திர பிரதானின் இல்லத்தில் வசித்துவந்த இவரின் உயிர் இன்று (மார்ச்.17) காலை 10.30 மணியளவில் பிரிந்தது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via