இன்ஸ்டாகிராம் காதல்.. காதலன், காதலி எடுத்த விபரீத முடிவு

தெலங்கானா மாநிலம் ஹுசூராபாத்தை சேர்ந்த ராகுல் (18) மற்றும் நிர்மல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வேதா (20) ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி துடித்தனர். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :