பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்-பிரதமர் மோடியின் 11 தீர்மானங்கள்

by Admin / 14-12-2024 11:44:53pm
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்-பிரதமர் மோடியின் 11 தீர்மானங்கள்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இரண்டு நாட்கள் நடந்தன . 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. .சனிக்கிழமை அன்று விவாதத்தில் பிரதமர் மோடி 11 தீர்மானங்களை கொண்டு வந்தார்.. இந்நிகழ்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கை உள்ளிட்டோர் வருகை புரிந்து இருந்த நேரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சபைக்கு வரவில்லை என்று எதிர் கட்சிகள் கேள்விகளை எழுப்பின.. அத்துடன்அதானி விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் அரசு முயலவில்லை என்கிற கேள்வியை எழுப்பினர். 

 ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக் வால் அரசியல் அமைப்பு 129 வது[ திருத்தம்] மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதாவை ராஜ்யசபையில் அறிமுகப்படுத்துகிறார்.

 

Tags :

Share via