போலீசாரை வெட்டிய சிறுவன் மீது துப்பாக்கி சூடு
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு சென்ற போலீசாரை 15 வயது சிறுவன் ஒருவன் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் காயம் அடைந்த போலீசாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அந்த சிறுவனை போலீசார் கைது செய்ய முயன்ற போது மீண்டும் போலீசாரை அறிவாளால் வெட்ட முயன்றதால் போலீசார் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.சிறுவனின் தாக்குதலுக்கு உள்ளன காவலர் ரஞ்சித்,சக்திவேல் இதில் படுகாயம் அடைந்த சிறுவன் ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பாட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்
Tags : போலீசாரை வெட்டிய சிறுவன் மீது துப்பாக்கி சூடு






.jpg)












