கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்துவோம்: செல்வப் பெருந்தகை

by Staff / 04-05-2024 02:16:40pm
கட்சி ரீதியாகவும் விசாரணை நடத்துவோம்: செல்வப் பெருந்தகை

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காவல்துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். கட்சி ரீதியாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்துவோம். நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன். ராகுல்காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார். காவல்துறை விசாரணைக்கு பிறகு முழு தகவல் தெரிய வரும் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo