12 வருஷமா குழந்தை இல்லை - கணவர் விபரீத முடிவு
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35). இவருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் சங்கர் மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சங்கரின் மனைவி அவரிடம் சண்டையிட்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் விரக்தியடைந்த சங்கர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















