ஓணப்பண்டிகை: 80 லட்சம் முந்திரி பாக்கெட்டுகள் தயார்

by Editor / 13-08-2022 04:17:30pm
ஓணப்பண்டிகை: 80 லட்சம் முந்திரி பாக்கெட்டுகள் தயார்

கேரளாவில் ஓணப்பண்டிகை முன்னிட்டு, 80 லட்சம் முந்திரி பாக்கெட்டுகள் அடங்கிய ஓணத்தொகுப்பு தயாராகி வருகிறது.முந்திரி கார்ப்பரேஷன் மற்றும் கேபெக்ஸ் ஆகியவற்றின் சார்பில், முந்திரி 80 லட்சம் வீடுகளை சென்றடைகிறது.

பாரம்பரிய முறையில் பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்பை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்ய பெரும் திட்டங்கள் உள்ளன என்று முந்திரி வளர்ச்சிக் கழகத் தலைவர் எஸ். ஜெயமோகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் சந்தைப்படுத்தல் வாகனத்தை அமைச்சர் பி. ராஜீவ் கொடியசைத்து, ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

மேலும், ஓணம் பண்டிகையின் போது முந்திரி கார்ப்பரேஷனின் தொழிற்சாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் தரமான முந்திரிகளை பெறுவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via
Logo