8 வயது மகனை எரித்து கொலை செய்த தாய் 30 மாதங்களுக்கு பிறகு பிடிபட்டார் 

by Editor / 11-07-2021 05:40:06pm
8 வயது மகனை எரித்து கொலை செய்த தாய் 30 மாதங்களுக்கு பிறகு பிடிபட்டார் 

 

குஜராத் மாநிலம் விரம்காம் நகரின் ஜலம்பூர் கிராமத்தில் ஹார்டிக் படேல் என்ற 8 வயது சிறுவன், தன்னுடைய பெற்றோர், தங்கை, மாமா மற்றும் தாத்த பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், மீண்டும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சுமார் 30 மாதங்களுக்கு மேலாக சிறுவன் குறித்து தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில், சமீபத்தில், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு படை மூலம் தேடுதல் வேட்டை தீவிரமானது.
அப்போது, போலீசார் சிறுவன் இருந்த கிராமத்தில் இருக்கும் கிராமவாசிகளிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவன் தாய்க்கும், அவரது மாமாவான ராமேஷ்க்கு ஒரு முறையற்ற உறவு இருப்பதைப் பற்றி அவர்கள் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சிறுவன் காணமல் போன பிறகு ரமேஷும் கிராமத்தை விட்டு வெளியேறி பருச் பகுதியில் வசித்து வருவதாக கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுவனின் தாய் மற்றும் மாமாவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, இருவரும் குற்றத்தைக் ஒப்புக் கொண்டுள்ளனர்.
விசாரணையில் அவர்கள், நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை அவன் பார்த்துவிட்டதால், அதை மற்றவர்களிடம் சொல்லிவிடுவான் என்ற பயத்தில், அவன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, வயல் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு அவனை கழுத்தை நெரித்து கொலை செய்து, அதன்பின் அவனது உடலை எரித்து பள்ளத்தில் புதைத்துவிட்டதாக கூறியுள்ளனர்.
போலீசார் இந்த சம்பவத்தில் மேலும் சிலர் மீது சந்தேகம் இருப்பதால், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். 

 

Tags :

Share via

More stories